/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கள் போதை பொருளா, தடை செய்ய வேண்டுமா' மாநாட்டுக்கு முன் பதில் தர கள் இயக்கம் வலியுறுத்தல்

ADDED : செப் 19, 2024 07:56 AM
ஈரோடு: 'கள் போதை பொருளா, தடை செய்ய வேண்டுமா,' என்ற தங்கள் நிலைப்பாட்டை பதிலாக திருமாவளவன் தெரிவிக்க வேண்டும்,' என, தமிழ்நாடு கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுபற்றி, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி, வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மட்டும் அரசின் இலக்கு மதுவை நோக்கியே இருக்கிறது. மது வருவாயை கொண்டே நலத்திட்டங்களை நடத்துவதும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்து வருவதும், தமிழகத்துக்கு வந்துள்ள
தலைகுனிவு. அதேநேரம், வி.சி.க., கொண்டிருக்கும் மது ஒழிப்பு கொள்கையை கள் இயக்கம் வரவேற்கிறது.தமிழகத்தில் மது பற்றி பொதுவான புரிதல் பலருக்கும் இல்லை. சர்வதேச அளவில் போதை பொருளாக ஓபியம், பெத்தடின், ெஹராயின், பிரவுன் சுகர், கொகைன், சைனா ஒயிட் போன்றவையும், மதுவாக பிராந்தி,
விஸ்கி, ரம், சாராயம் போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் உணவாக கருதப்படும் கள்ளை, போதை பொருளாக குறிப்பிடுவது வேதனை.விரைவில், வி.சி.க., சார்பில் நடக்கவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில், கள் உணவாக ஏற்று கொள்ளப்படுகிறதா. இல்லை போதை பொருளாக அடையாளம் காட்டப்படுகிறதா என, விளக்க வேண்டும். கள் தடை செய்ய
வேண்டிய போதை பொருள் என்றும், மதுதான் என்ற நிலைப்பாட்டை திருமாவளவனும், அவரது கட்சியும் எடுக்குமானால், எங்களுடன் வாதிட வேண்டும். எனவே, மாநாட்டுக்கு முன்பாக கள் தடை செய்யப்பட
வேண்டிய பொருளா என திருமாவளவன் பதில் தர வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.