/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெண்டாங்கி கிராமத்தில் சீரான மின்சாரம் கிடைக்குமா?
/
வெண்டாங்கி கிராமத்தில் சீரான மின்சாரம் கிடைக்குமா?
வெண்டாங்கி கிராமத்தில் சீரான மின்சாரம் கிடைக்குமா?
வெண்டாங்கி கிராமத்தில் சீரான மின்சாரம் கிடைக்குமா?
ADDED : ஜூலை 17, 2025 02:33 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த வாழவந்தி கோம்பை வெண்டாங்கி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், 200க்கும் அதிகமான பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் இருக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்து உள்ளனர்.
இங்கு மா, தென்னை மற்றும் பாக்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் பகல், இரவு நேரத்தில் அதிகளவு மின்சாரம் தடைபடுவதால் விவசாயம் மற்றும் வீட்டில் இருக்கும் முதியோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுத்து, தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்