/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பத்திர பதிவில் சிக்கல்: காங்., சார்பில் முறையீடு
/
பத்திர பதிவில் சிக்கல்: காங்., சார்பில் முறையீடு
ADDED : செப் 27, 2024 07:35 AM
ஈரோடு: ஆன்லைனில் பட்டா பெறுதல், பதிவிறக்கம், பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் வழங்கிய மனுவில் கூறியதாவது: தற்போது பட்டா பெறுதல், திருத்தம், கூட்டுப்பட்டா, தனிப்பட்டா பெறுதல் முழுமையாக ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் பட்டா குறித்த விபரங்கள் முழுமையாக இல்லாததால், பதிவேற்றம் செய்வது, அனுமதிக்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தல், பத்திரம் பதிவு செய்வதிலும் பல குளறுபடிகளாக உள்ளது. இதனால் பலர் கிரயம் செய்ய முடியாமல், கல்யாணம், மருத்துவ செலவுகளை மேற்கொள்ள பணம் இன்றி பரிதவிக்கின்றனர். அரசுக்கும் வருவாய் இழப்பும், தாமதமும் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுரவில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

