/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது சுத்திகரிப்பு நிலைய பணிக்கு டெண்டர் வெளியீடு
/
பொது சுத்திகரிப்பு நிலைய பணிக்கு டெண்டர் வெளியீடு
ADDED : அக் 11, 2024 01:16 AM
பொது சுத்திகரிப்பு நிலைய
பணிக்கு டெண்டர் வெளியீடு
பெருந்துறை, அக். 11-
பெருந்துறையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி கடிதம்
அனுப்பினார்.
அதில், 'கடந்த, 2023 நவ., 21ல் அப்போதைய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, 40 கோடி ரூபாய் மதிப்பில், சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன் பணிகள் எந்த அளவில் உள்ளது?' என்று கேட்டிருந்தார்.
அதற்கு அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்தில், 'பொது சுத்தகரிப்பு நிலையப் பணி தொடர்பான டெண்டர் கோரி இணையத்தில், செப்., 30ம் தேதி, தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

