/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி 3 வாரமாகியும் கூலி வரவில்லை'
/
'இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி 3 வாரமாகியும் கூலி வரவில்லை'
'இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி 3 வாரமாகியும் கூலி வரவில்லை'
'இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி 3 வாரமாகியும் கூலி வரவில்லை'
ADDED : ஜூலை 16, 2025 01:05 AM
ஈரோடு, அரசின் இலவச வேட்டி தயாரிப்பு துவங்கி, மூன்று வாரம் கடந்தும் நெசவாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை.
வரும் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு இலவச சேலை, 1 கோடியே, 34 லட்சத்து, 43,647, வேட்டி, 1 கோடியே, 41 லட்சத்து, 61,410 என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய, 680 கோடி ரூபாய் நிதி அறிவிப்பு செய்தது. நுால் டெண்டர் நீங்கலாக, நெசவாளர்களுக்கான கூலிக்கு, 75 கோடி ரூபாய் முதற்கட்டமாக அரசு விடுவித்தது. வேட்டி தயாரிப்பு பணியும், கடந்த ஜூன், 20ல் துவங்கியது. தற்போதைய நிலையில் ஈரோடு, திருச்செங்கோடு சரகத்தில், 5,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் முழு அளவில் தயாராகி வருகிறது.
இதுபற்றி விசைத்தறியாளர்கள் கூறியதாவது: ஒரு வேட்டிக்கு கடந்தாண்டு வரை, 24 ரூபாய் கூலியாக வழங்கினர். கடந்தாண்டு இறுதியில் கூலியை உயர்த்தி வேட்டிக்கு, 26.40 ரூபாய், சேலைக்கு, 46.75 ரூபாய் என அறிவித்து, இந்தாண்டு முதல் வழங்குவதாக கூறினர். நெசவாளர்கள் மத்தியில் இந்தாண்டு உற்பத்திக்கு புதிய கூலி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இச்சூழலில் கடந்த மூன்று வாரத்துக்கும் மேலாக வேட்டி உற்பத்தி நடப்பதால் ஒரு தறியில், 200 முதல், 250 வேட்டிகள் வரை உற்பத்தி செய்துள்ளனர். இதுவரை புதிய கூலி ஒரு ரூபாய் கூட வழங்கப்படாததால் நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த, 2023ல், 100 கோடி ரூபாய், 2024ல், 200 கோடி ரூபாய், நடப்பாண்டு, 75 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கி உள்ளதால் கூலியை எதிர் நோக்கியுள்ளனர்.
உற்பத்திக்கு ஏற்ப அந்தந்த வாரங்களில் அல்லது 10 நாட்களுக்குள் கூலியை வழங்கினால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு கூறினர்.