/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதம்
/
ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதம்
ADDED : டிச 14, 2025 05:09 AM
ஈரோடு: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணா விரத போராட்டம் தமிழக அளவில் நேற்று நடந்தது. ஈரோட்டில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், மதியழகன், ஆறுமுகம் தலைமை வகித்தனர்.
கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்-களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி, 2010 ஆக., 23க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்-டுள்ள அச்சுறுத்தலில் இருந்து காக்க தமிழக அரசு சீராய்வு மனு போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி, நிரந்தரப்படுத்த வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக அரசு செயல்ப-டுத்த வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் 19ம் தேதி வரை வட்டார அளவில் பிரசார இயக்கம், 27ல் மாவட்ட தலைநகரில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஜன.,6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

