/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை
/
தை பொங்கலுக்கு வழங்க 2,500 டன் பச்சரிசி வருகை
ADDED : டிச 14, 2025 05:10 AM
ஈரோடு: தை பொங்கலுக்கு தமிழக அரசு வழக்கமாக ஒரு கிலோ பச்சரி-சியை பொங்கல் பையில் வைத்து ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்குகிறது.
நடப்பாண்டு பொங்கலுக்கு வழங்குவதற்காக, ஆந்திர மாநிலம் நவபாலம் பகுதியில் இருந்து, சரக்கு ரயிலில், 2,500 டன் பச்சரிசி நேற்று காலை ஈரோடு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மொபைல் கடையில் லேப்டாப் திருட்டு
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சரண் மொபைல் ஷோரூம் உள்ளது. கடந்த, 10, 11ல் கடைக்கு விடு-முறை அளிக்கப்பட்டிருந்தது. உரிமையாளர், 12ம் தேதி காலை கடை திறக்க வந்தபோது முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது.
உள்ளே வைத்திருந்த, 10 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருட்டு போனது தெரிந்தது. மொபைல் கடை அருகே டெய்லர் கடை, டியூசன் சென்டரிலும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.

