ADDED : ஜூன் 24, 2026 04:45 AM
ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில், 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ஈரோடு
மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், கடந்த, 17ம் தேதி முதல்
ஜமாபந்தி நடந்தது. தாளவாடி தாலுகாவில் கலெக்டர் கந்தசாமி, ஈரோடு
தாலுகாவில் ஆர்.டி.ஓ., சிந்துஜாவும் ஜமாபந்தி பணிகளை நேர் செய்தனர். ஈரோடு
தாலுகாவில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 302 மனுக்கள் பெறப்பட்டன.
இறுதி
நாளான நேற்று, 154 மனு ஏற்கப்பட்டது. முகாமில், 24 மனுக்களுக்கு உடனடி
தீர்வு வழங்கப்பட்டதாக, தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருந்துறை, கோபி, சத்தி தாலுகாக்களில் ஜமாபந்தி முகாம் இன்று
நிறைவடைகிறது.
* அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நான்கு நாட்களாக,
அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி பிர்காக்களுக்கு ஜமாபந்தி
நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 340 பேர் மனு அளித்தனர். மாவட்ட
வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் இளஞ்செழியன்,
ஆர்.ஐ., செந்தில்ராஜா மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
