ADDED : ஜூன் 24, 2026 04:45 AM

புன்செய்புளியம்பட்டி:ஜி
ராம்ஜி திட்டம் வரும் ஜூலை, 1ம் தேதி முதல் நாடு முழுவதும்
அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பாக,
40 சதவீதம் நிதி ஒதுக்கிய திட்டத்தை செயல்படுத்த விதிமுறை உள்ளது.
இதனால்
மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். ஏற்கனவே
செயல்படுத்தப்பட்ட திட்டத்தை பெயர் மாற்றம் செய்யாமல் அமல்படுத்த
வலியுறுத்தி, இந்திய கம்யூ., கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்
சங்கம் சார்பில், பவானிசாகர் யூனியன் அலுவலகம் முன் நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட வேலை திட்ட
தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சட்டம் பாடுபடும்
தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்கும் சட்டம். எனவே தமிழக முதல்வர்
சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. திட்டத்தின் பெயரை மாற்றியதற்கும்
எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற
வலியுறுத்தி கோஷமிட்டனர்.
*பர்கூர்மலை ஊராட்சி அலுவலகம் முன்,
சி.பி.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்
கணேசன் தலைமையில், தாமரைக்கரை, பர்கூர், தட்டகரை, தேவர்மலை
உள்ளிட்ட பல இடங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
