/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளைச்சல் அதிகரிப்பால் மல்லிகை பூ விலை சரிவு
/
விளைச்சல் அதிகரிப்பால் மல்லிகை பூ விலை சரிவு
ADDED : ஏப் 24, 2025 01:36 AM
புன்செய்புளியம்பட்டி:விளைச்சல் அதிகரித்துள்ளதால், மல்லிகை பூ விலை சரிந்துள்ளது.
புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில், 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது. தினமும் சராசரியாக, 10 டன் பூக்கள் அறுவடை செய்யப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கோடை சீசன் என்பதால், மல்லிகை உற்பத்தி அதிகரித்துள்ளது.
பனி காலத்தில், ஒரு ஏக்கரில் ஒரு கிலோ உற்பத்திக்கான தோட்டத்தில் தற்போது, 30 கிலோ விளைச்சல் கிடைக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பனி காலத்தில் விளைச்சல் குறைந்து ஒரு கிலோ மல்லிகை பூ, 4,800 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400க்கு விற்பனையாகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்தும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் விலை குறைந்துள்ளது. முல்லை ஒரு கிலோ, 140 ரூபாய், சம்பங்கி, 40 ரூபாய், அரளி, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.