/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ்- 2 பொதுத்தேர்வில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ்- 2 பொதுத்தேர்வில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்- 2 பொதுத்தேர்வில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்- 2 பொதுத்தேர்வில் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : -பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோடு, ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய, 139 மாணவ,- மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதனால் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
மாணவி எம்.எஸ்.பிருத்விகா, 600க்கு 589 மதிப்பெண்களும், மாணவர் பி.நிரஞ்சன், 588 மதிப்பெண்களும், மாணவர் எஸ்.வி.சங்கர், 585 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். 585 மதிப்பெண்களுக்கு மேல் மூன்று பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 24 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 63 பேரும் எடுத்துள்ளனர். 19 மாணவ-, மாணவிகள் பல்வேறு பாடங்களில், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் என்.முத்துசாமி, தாளாளர் சி.பி.சந்திரசேகரன், பொருளாளர் வி.என். சுப்பிரமணியம், துணைத்தலைவர் கே.ஈஸ்வரமூர்த்தி, துணைச்செயலாளர்கள் என்.கோகுல சந்தான கிருஷ்ணன், கே.நாகராஜன் உள்பட பலர் பாராட்டினர்.