சிறு, குறு நிறுவனங்களுக்கான ஜெட் விழிப்புணர்வு முகாம்
சிறு, குறு நிறுவனங்களுக்கான ஜெட் விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 01, 2026 02:39 AM
ஈரோடு: ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில் வணிக துறை இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ.,) ஜெட் மற்றும் ஆற்றல் தணிக்கை உதவி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் சிறப்பா-ளராக பங்கேற்று பேசினார்.
இதில், சிறு, குறு நிறுவனங்கள் பூஜ்-ஜிய குறைபாடு மற்றும் பூஜ்ஜிய பாதிப்பு (ஜீரோ டிபெக்ட் ஜீரோ எபக்ட்) கொள்கையுடன் சர்வதேச தரத்திலான பொருட்களை உற்-பத்தி செய்வது குறித்தும், ஜெட் சான்றிதழ் பெறுவதற்கான வழி-காட்டுதல்களும் வழங்கப்பட்டன. தொழிற்கூடங்களில் மின்சாரம் மற்றும் ஆற்றல் வீணாவதை தடுத்து, உற்பத்தி செலவை குறைப்-பது குறித்த ஆலோசனைகள் தொழில் முனைவோருக்கு வழங்கப்-பட்டன.மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்-படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம், தொழில் வளர்ச்சி குழு தலைவர் வெங்கடாசலம், தொழில் முனைவோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
