பாண்டியாறு-மாயாறு நதிநீர் இணைப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
பாண்டியாறு-மாயாறு நதிநீர் இணைப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 01, 2026 02:39 AM
கோபி: பாண்டியாறு-மாயாறு நதிநீர் இணைப்பு விழிப்புணர்வு ஆலோ-சனை கூட்டம், கவுந்தப்பாடியில் நடந்தது.
இதில் பங்கேற்ற, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் பேசியதாவது: பாசனங்களில் அடுத்தாண்டு மிகப்பெரிய வறட்சியை சந்திக்க உள்ளோம். பாண்டி
யாறு - மாயாறு திட்டத்தை அமல்படுத்த, இரு அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்-டுள்ளோம். கடந்தாண்டு, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்த அரசு, இன்று 10 லட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்-டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிக்கு இனி ஆளில்லை. இனிமேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதாக இருந்தால், மோட்டா ரக நெல்லை சாகுபடி செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். அரசுக்கு நெல்லை கொடுக்க வேண்டாம். சன்னரகத்தை மட்டும் சாகுபடி செய்து, அந்த நெல்லை விவசாயிகள் தேவைக்கு மட்டும் பயன்
படுத்தி கொள்ள வேண்டும். நம்முடைய தேவையாக விவசாயி-களின் வீட்டை காப்பாற்றி விட்டு தான், நாட்டை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெரிய
சாமி, அந்தியூர் விவசாய சங்க நிர்வாகி சூரிய மூர்த்தி உட்பட பல்-வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பேசினர்.
