/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.38.71 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் ஆவணங்களை உறுதி செய்தபின் விடுவிப்பு
/
ரூ.38.71 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் ஆவணங்களை உறுதி செய்தபின் விடுவிப்பு
ரூ.38.71 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் ஆவணங்களை உறுதி செய்தபின் விடுவிப்பு
ரூ.38.71 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் ஆவணங்களை உறுதி செய்தபின் விடுவிப்பு
ADDED : ஏப் 05, 2024 01:11 AM
ஈரோடு:ஈரோடு
அருகே, 38.71 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை, தேர்தல் பறக்கும்
படையினர் பிடித்தனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கவே விடுவித்தனர்.
ஈரோடு
மாவட்டம் பவானியில், லட்சுமி நகர் அருகே பறக்கும் படை அதிகாரி
செந்தில்குமார் தலைமையிலான குழு, நேற்று காலை, ௭:௩௦ மணியளவில் வாகன
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 'சீக்யூள் லாஜிஸ்டிக்' என்ற
நிறுவனத்தின் பணம், நகை கொண்டு செல்லும் பாதுகாப்பு வாகனம் வந்தது.
சோதனை
செய்தபோது, 38 கோடியே, 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை
இருந்தது. நகைக்கடைகளின் ஆர்டரின் பேரில் செய்து, சேலத்தில் இருந்து
கோவைக்கு செல்வது தெரிய வந்தது. வாகனத்தில் டிரைவர் மற்றும்
துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இருந்தனர்.
அவர்கள் சமர்ப்பித்த
ஆவணங்களில், சில குறைபாடுகள் இருந்தன. இதனால் ஈரோடு ஆர்.டி.ஓ.,
சதீஸ்குமாரிடம் வாகனத்துடன், நகைகளை ஒப்படைத்தனர். வணிக
வரித்துறை, வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்களும் சென்று விசாரணையை துவங்கினர்.
இதற்கிடையில் சேலத்தில்
இருந்து ஈரோடு, கோவையில் உள்ள பிரபல நகைக்கடைகள், வாகன நிறுவனத்தின்
கோவை நிர்வாகிகள், உரிய ஆவணங்களுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்து
ஆவணங்களை சமர்ப்பித்தனர்.அவற்றை உறுதி செய்து, மாவட்ட தேர்தல் பிரிவினரும் விசாரித்து, நகைகள் மற்றும் வாகனத்தை விடுவித்தனர்.

