/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் படிக்கட்டு பாதையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
கோவில் படிக்கட்டு பாதையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவில் படிக்கட்டு பாதையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
கோவில் படிக்கட்டு பாதையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஜூலை 25, 2025 12:45 AM
சென்னிமலை, சென்னிமலை கோவில் மலைப்பாதை படிக்கட்டில் அமர்ந்து இளைப்பாறிய மூதாட்டியிடம் மர்ம ஆசாமி நகை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணி, 10 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் டூவீலர், கார்களில் செல்ல அனுமதி இல்லை. செவ்வாய்கிழமை மற்றும் இதர விசேஷ நாட்களில் மட்டும், மலை கோவிலுக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மற்ற நாட்களில், 1,320 படிக்கட்டுகள் வழியாக சென்று தான் தரிசனம் செய்ய முடியும்.
சிவகிரி அருகே தட்டாம்பாளையம், கோட்டைக்காட்டுவலசை சேர்ந்த செங்கோட்டையன் மனைவி ஜீவரத்தினம், 63; நேற்று முன்தினம் மகன்கள் குகன், கரிகாலன் மற்றும் உறவினருடன் படிக்கட்டு வழியாக சென்று தரிசனம் முடித்து, படிக்கட்டு வழியாக அடிவாரம் நோக்கி நடந்து சென்றார். அவருடன் வந்தவர்கள் முன்னால் சென்றனர். இளைப்பாறுவதற்காக, 270வது படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது, திடீரென வந்த மர்ம ஆசாமி, அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் புகுந்து ஓடி விட்டான். சென்னிமலை போலீசார், நகை பறித்த களவாணியை தேடி வருகின்றனர்.