ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, திண்டல், பாலாஜி கார்டன், சவுரி ராஜன் மனைவி பரிமளா, 54, தனியார் பள்ளி ஆசிரியை.
வீட்டருகேயுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் இரவு, 7:30 மணிக்கு மொபட்டியில் சிவன் நகர் அருகே சென்றார். பல்சர் பைக்கில் பின் தொடர்ந்த ஹெல்மெட் அணிந்த இரு வாலிபர்கள், பரிமளா போட்டிருந்த ௨ பவுன் தங்க சங்கிலியை இழுத்து பறித்து செல்ல முயன்றனர். அப்போது நகை பாதி அறுந்து ஹெல்மெட் வாலிபர்கள் கைக்கு போனது. மீதியை பரிமளா பிடித்து கொண்டார். வாலிபர்கள் மின்னலாக பறந்து விட்டனர். புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.