ADDED : ஜூன் 16, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்-படி வரும், 19ம் தேதி நடக்கிறது.
எழுத படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த-வர்கள், செவிலியர்கள், டெய்லர், டிரைவர், தட்-டச்சர் உட்பட பல்வேறு பணிக்கு தனியார் துறை-யினர் பணியமர்த்தம் செய்ய வருகின்றனர். காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்-கிறது. கூடுதல் விபரத்துக்கு, 86754-12356, 94990-55942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்-ளலாம்.
