ADDED : பிப் 25, 2026 07:11 AM

பெருந்துறை: பெருந்துறை சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 78வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில், மலர்களால் அலங்கரித்த ஜெ., உருவ படத்துக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமையில், கட்சியினர் மலர் துாவி மரியாதை செய்தனர். தொடர்ந்து மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இதேபோல் பெருந்துறை வடக்கு ஒன்றியம், கருமாண்டி செல்லிபாளையம் நகரம் சார்பில், பெருந்துறை அண்ணாசிலை அருகில், ஜெ., உருவப்படத்துக்கு மரியாதை செய்து, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், பூபாலகிருஷ்ணன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சிவநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் வடிவேல், பெருந்துறை முன்னாள் யூனியன் சேர்மேன் சாந்தி ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
