/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதி மேம்படுத்துதல் குறித்த நீதிபதிகள் கூட்டம்
/
நீதி மேம்படுத்துதல் குறித்த நீதிபதிகள் கூட்டம்
ADDED : ஆக 24, 2025 12:57 AM
ஈரோடு, சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள கவர்னருமான சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன், குமரப்பன் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர். மூன்றாண்டுக்கு மேலான வழக்குகளை முடித்து வைத்தல். பொருத்தமான அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை முன்கூட்டியே தீர்த்து வைத்தல்.
வழக்குகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனு, நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக உள் கட்டமைப்பு, அரசு வக்கீல்கள் வழக்கு உத்திகளில் கவனம் செலுத்துவது குறித்து நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் விளக்கினர்.
கூட்டத்தில் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சுஜாதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ணப்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, டி.ஆர்.ஓ. சாந்தகுமார், ஆர்.டி.ஓ.,க்கள் சிந்துஜா, சிவானந்தம், வக்கீல்கள், போலீசார், வருவாய் துறையினர் பங்கேற்றனர்.