/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் வாய்க்கால் கரை சீரமைப்பு பணி தீவிரம்
/
காளிங்கராயன் வாய்க்கால் கரை சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : அக் 24, 2024 03:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்-படும் தண்ணீர் மூலம், காளிங்கராயன் வாய்க்கால் பாசன பகு-தியில், 15,540 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கு மஞ்சள், கரும்பு, வாழை, மக்காசோளம், மரவள்ளி கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்படும்.
காளிங்கராயன் வாய்க்காலில் கடந்த ஜூலை, 12ல் தண்ணீர் திறக்கப்பட்டு, பாசன பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்-தப்பட்டுள்ளது. இருப்பினும், மழை நீர் முழு அளவில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த, 21 இரவு, 22 பகலில் பெய்த மழையால் மொடக்குறிச்சி வட்டாரத்தின் பல்வேறு பகுதி மழை நீர் வெள்ளமாக, காளிங்கராயன் வாய்க்காலில் வடிந்தது. இதில் சாவடிபாளையம் அருகே, காளிங்கராயன் வாய்க்காலில் அதிகமாக மழை நீர் வடிந்ததால், கரையில் உள்ள மண் சுவர்கள் சேதம-டைந்து வாய்க்காலுக்குள் விழுந்தது. வெள்ள நீர் அதிகமாக சென்-றதால், அம்மண் அடித்து செல்லப்பட்டு கரைகள் பழுதானது. ஆனாலும், முழுமையான உடைப்பு ஏற்படாததால், அருகே இருந்த வயல்கள் தப்பின. அந்த இடத்தில், 20 மீட்டர் துாரத்-துக்கு கரைகள், கற்கள் சரிந்ததால், நீர் வளத்துறையினர் முதற்கட்-டமாக மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தினர். அதன் மீது மண், கல்லை கொண்டு வந்து கொட்டி, கரையை பலப்ப-டுத்தும் பணியை செய்து வருகின்றனர்.