/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.மா.கா.,வில் இணையும் காமராஜர் மக்கள் கட்சி
/
த.மா.கா.,வில் இணையும் காமராஜர் மக்கள் கட்சி
ADDED : டிச 20, 2025 07:17 AM
ஈரோடு: - தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜ-யகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சி, த.மா.கா.,வில் இணையும் விழா இன்று (20ம் தேதி) நடக்கிறது. ஈரோடு வில்லரசம்பட்டி ஸ்ரீலட்சுமி துரைசாமி மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுக்கு, தலைவர் வாசன் எம்.பி., தலைமை வகிக்-கிறார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 3,௦௦௦ நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் த.மா.கா., மாநில, மாவட்ட நிர்வா-கிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காமராஜர் மக்கள் கட்சி முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.
இந்த இணைப்பு விழா என்பது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தல் 2026க்கான பிரசார தொடக்க விழா நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகிகள் விடியல் சேகர், எஸ்.டி.சந்திர-சேகர், யுவராஜா மற்றும் மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்-முகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

