/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 டோக்கனுக்கு ஸ்நாக்ஸ் வினியோகம்: பவானி டாஸ்மாக் கடையில் அட்டூழியம்
/
ரூ.10 டோக்கனுக்கு ஸ்நாக்ஸ் வினியோகம்: பவானி டாஸ்மாக் கடையில் அட்டூழியம்
ரூ.10 டோக்கனுக்கு ஸ்நாக்ஸ் வினியோகம்: பவானி டாஸ்மாக் கடையில் அட்டூழியம்
ரூ.10 டோக்கனுக்கு ஸ்நாக்ஸ் வினியோகம்: பவானி டாஸ்மாக் கடையில் அட்டூழியம்
ADDED : டிச 20, 2025 07:17 AM
பவானி: ஈரோடு மாவட்டத்தில், 182 டாஸ்மாக் கடை உள்ளது. இதில் வனப்பகுதிகளில் மூன்று கடை உள்ளது. இந்த கடைகளில் முதன் முதலில், காலி மதுபாட்டில் பெறும் திட்டம் நடைமு-றைக்கு வந்தது. இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, மீதி, 179 டாஸ்மாக் கடைகளிலும் கடந்த, 2ம் தேதி முதல் காலி மது பாட்டில் பெறும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
மது விற்கும்போது அதிகபட்ச விற்பனை விலையுடன், 10 ரூபாய் கூடுதலாக பெறப்படும். பின்னர் வாங்கிய கடைகளி-லேயே, ஸ்டிக்கருடன் கூடிய காலி மது பாட்டிலை திரும்ப ஒப்ப-டைத்து, 10 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்-டுள்ளது.
இந்நிலையில் பவானி, காலிங்கராயன்பாளையம் மாட்டாஸ்பத்-திரி அருகே, பெருந்தலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்:3848), 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு போய்-விடக்கூடாது என்பதற்காக, டாஸ்மாக் ஊழியர்கள், பார் உரிமை-யாளருடன் சேர்ந்து நுாதன திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்-துள்ளனர்.
மதுபாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் கடை எண் உட்பட, 10 ரூபாய்க்கான ஸ்டிக்கரை, பாட்டிலில் ஒட்டாமல், பச்சை கலர் டோக்கனில், 10 ரூபாய் ஸ்டிக்கரை ஒட்டி, மது வாங்கும் வாடிக்-கையாளர்களுக்கு வழங்கி விடுகின்றனர். பின்னர் காலி மதுபாட்-டிலுடன் சேர்த்து, பச்சைகலர் டோக்கனை, கடையை ஒட்டி-யுள்ள பாரில் கொடுத்தால், 10 ரூபாய் தராமல், 10 ரூபாய்க்கு சுண்டல், முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை தருகின்றனர். பணம் கேட்டால் தின்பண்டங்கள் தான் தருவோம் என கூறுகின்-றனர்.

