/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 வயதை கடந்த ஈரோடு தம்பதிக்கு கனகாபிஷேகம்
/
100 வயதை கடந்த ஈரோடு தம்பதிக்கு கனகாபிஷேகம்
ADDED : அக் 22, 2024 01:29 AM
100 வயதை கடந்த ஈரோடு
தம்பதிக்கு கனகாபிஷேகம்
ஈரோடு, அக். 22
ஈரோடு அருகே 46 புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைப்பாளியை சேர்ந்த தம்பதியர் பெருமாள் வீரம்மாள். இவர்களுக்கு நான்கு பெண்கள், இரு மகன்கள் உள்ளனர்.
நுாறு வயதை கடந்த தம்பதியருக்கு, கனகாபிஷேக விழா நடத்த மகன்கள், மகள்கள் மற்றும் எள்ளுகொள்ளு பேரன், பேத்திகள் திட்டமிட்டனர். இதன்படி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் யாகம் மற்றும் சடங்குகள் செய்து, கோலாகலமாக கொண்டாடினர். விழாவில் நுாறு வயதை தொட்ட தம்பதியர், மாங்கல்யம் மாற்றிக் கொண்டனர். தம்பதியினரிடம் குடும்பத்தினர் மட்டுமின்றி ஊர்மக்களும் ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.
இதுகுறித்து தம்பதியரின் மகன், மகள்கள் கூறியதாவது:
எங்களது பெற்றோருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்னையும் இல்லை. இன்றும் பிறரை சாராமல், அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதுபோன்ற திருமணத்தை தங்களது குடும்பத்தில் உள்ள வயதான தம்பதியினருக்கு, மகன்மகள்கள் நடத்தி, அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

