sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் தொடக்கம்

/

சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் தொடக்கம்

சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் தொடக்கம்


ADDED : அக் 28, 2024 03:48 AM

Google News

ADDED : அக் 28, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, 36ம் ஆண்டு விழா-வாக நவ., 2ம் தேதி சனிக்கிழமை துவங்குகிறது.

விழா தொடக்கமாக அன்று காலை, 6:30 மணிக்கு கிழக்கு ராஜவீ-தியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி மலை கோவிலுக்கு புறப்பாடு நடக்கும். அதை தொடர்ந்து மலை மீதுள்ள கோவிலில், 9:30 மணிக்கு விக்னேஸ்-வர பூஜை நடக்கிறது.தொடர்ந்து விழா நடக்கும் ஆறு நாட்களும் காலை, 10:00 மணிக்கு யாக பூஜை, மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவ-ருக்கு அபிஷேகம் நடக்கும். அதை தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடக்கும். தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

நவ.,7 ம் தேதி மதியம், 1:௦௦ மணிக்கு வேல் வாங்கும் நிகழ்வும் அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடி-வாரம் எழுந்தருள்வார்.

அங்கு இரவு, 8:00 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி காலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.

விரதம் இருப்போருக்கு...

விழாவில் காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் நவ., 2ம் தேதி சனிக்கிழமை மதியம், 12:௦௦ மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத-சிவாச்சாரியார் காப்பு அணிவிப்பார்.






      Dinamalar
      Follow us