/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை
/
காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை
காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை
காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : அக் 09, 2025 01:17 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், காங்கேயத்தில் நேற்று காலை நடந்தது.
காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலர், முன்னாள் அமைச்சர் ஜெயராமன் பேசினார். வரும் நாட்களில் அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை குறித்தும், இனி செய்யப்போகும் நல்ல திட்டங்கள் குறித்தும் தொழில்நுட்ப பிரிவினர் பொதுமக்களுக்கு தகவல்களை பரிமாற வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பூத்களுக்குட்பட்ட வீடுகளுக்கு சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வேண்டிய விபரங்களை தரவு செய்து பட்டியலை சரி செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் அருண்குமார், தொழில்நுட்ப அணி நிர்வாகி லோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.