ADDED : ஆக 27, 2026 03:25 AM
காங்கேயம்: காங்கேயம் பகுதியில் தாராபுரம் ரோட்டை நான்கு வழிச்சாலை-யாக மாற்றும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டி கள் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
காங்கேயம்- - தாராபுரம் ரோடு விரிவாக்க பணிகள், கடந்த ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. ஓராண்டு ஆன நிலை-யிலும், சாலையின் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக சமப்படுத்தப்படாமல் உள்ளது. ரோட்டோரம் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, நிரவியபடி பணிகள் நடைபெறாமல் கைவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கி.மீ., தொலை-விற்கு ஒருமுறை சாலையின் குறுக்கே பாலம் வேலை நடைபெற்-றது. அந்த பணியும் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் அதிகமான வாகன போக்குவரத்தால் நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகளும் நடைபெறு
கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், உடனடியாக பணியை முடித்து, நான்கு வழிச்சா-லையாக மாற்றி, விபத்தில்லா போக்குவரத்துக்கு வகை செய்ய வேண் டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
