நிலக்கடலை பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
நிலக்கடலை பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஆக 27, 2026 03:25 AM
ஈரோடு: பெருந்துறை தாலுகாவில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க உறுதுணை சீர-மைப்பின் திட்டத்தின் கீழ், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்து, துறை சார்ந்த திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டம், வேளாண் கிடங்கில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள், நுண்ணுாட்டம் பெறுவது குறித்து விளக்கினார். வேளாண் அறி-வியல் நிலையம் விஞ்ஞானி சீனிவாசன், நிலக்கடலையில் ஒருங்-கிணைந்த பூச்சி மற்றும் நோய் குறித்தும், அவற்றை கட்டுப்ப-டுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.உதவி தோட்டக்கலை அலுவலர் சுகுமார், நுண்ணீர் பாசன முறை, பி.எம்.கிசான் திட்டத்தை பயன்படுத்த யோசனை தெரி-வித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் விசுவநாதன், தாமோதரன் ஆகியோர் அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்-கினர். சீனாபுரம், தலையம்பாளையம், நிமிட்டிபாளையம் பகுதி விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.
