ADDED : செப் 07, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
பவானிசாகர்:பவானிசாகரில்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு
ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து மகளிர் கஞ்சிக்கலய ஊர்வலம் துவங்கியது.
ஆதிபராசக்தி
கோவிலில் இருந்து இலங்கை தமிழர் முகாம், மார்க்கெட் சாலை, பஸ் ஸ்டாண்ட்
வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு மழை வேண்டி, கலச பூஜை, வேள்வி
பூஜைகள் நடந்தன. ஊர்வலத்தில் பால்குடம், கஞ்சிக்கலயத்தை ஏந்தி
செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர். கஞ்சிக்கலயத்தை அம்மனுக்கு
வார்த்து பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது.
