தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாலிபருக்கு வெட்டு; 5 பேர் ஓட்டம்

வாலிபருக்கு வெட்டு; 5 பேர் ஓட்டம்

வாலிபருக்கு வெட்டு; 5 பேர் ஓட்டம்


ADDED : செப் 07, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மரப்பாலம் ராஜாஜி வீதி கள்ளுக்கடை மேட்டை சேர்ந்த ஹனிபா மகன் முஜிகீர், 19; நேற்று முன்தினம் இரவு மொட்டை கார்த்தி என்பவர், முஜிகீரிடம் டூ-வீலரில் குப்பிபாலம் அருகே கூட்டி சென்று விடுமாறு கேட்கவே அழைத்து சென்றார்.

குப்பிபாலம் அருகே ஏற்கனவே மயில் கவுதம், ஆதி, சந்தோஷ், கவுதம், ஸ்ரீ ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் முஜிகீரை கைகளால் அடித்தனர். என்னுடைய எதிரி தீபனுடன் பேசுகிறாயா எனக்கேட்டு தகாத வார்த்தை பேசிய மயில் கவுதம், மறைத்து வைத்திருந்த கத்தியால் முஜிகீரை வெட்டினார். இதில் தலையில் வெட்டு, வலது தோள்பட்டை, இடது தொடை, மணிக்கட்டில் ரத்தக்காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்தனர்.

ஒதுங்கிய போலீசார்

அடிதடி நடந்த பகுதி ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 1.5 கி.மீ., துாரமே உள்ளது. ஆனால் அந்தப்பகுதி தங்கள் எல்லைக்கு உட்பட்டதல்ல என்று, டவுன் போலீசார் மறுத்து மொடக்குறிச்சி போலீசாரிடம் தள்ளி விட்டனர். ஆனால் மொடக்குறிச்சி ஸ்டேஷன், 28 கி.மீ., தொலைவில் உள்ளது. அவர்கள் வந்து விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us