ADDED : செப் 07, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சென்னை
மாவட்ட காவலர் சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில்,
ஆண்டுதோறும் செப்.,6ல் காவலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதன்படி
நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட
போலீஸ் சார்பில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது. எஸ்.பி., கிரண்
ஸ்ருதி, ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று
கொண்டார். முன்னதாக போலீஸ் பணியின் போது உயிர்நீத்தவர்களுக்கு
எஸ்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர்
குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. மாலையில் கலை நிகழ்ச்சி
நடந்தது.
