/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புங்கம்பாடி ரயில்வே பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் சிக்கும் கழிவால் 'கப்பு'
/
புங்கம்பாடி ரயில்வே பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் சிக்கும் கழிவால் 'கப்பு'
புங்கம்பாடி ரயில்வே பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் சிக்கும் கழிவால் 'கப்பு'
புங்கம்பாடி ரயில்வே பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் சிக்கும் கழிவால் 'கப்பு'
ADDED : ஜன 15, 2023 11:57 AM
சென்னிமலை, ஜன. 15-
பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால், கவுந்தப்பாடி அருகே இரண்டாக பிரிகிறது. அதில் ஒரு வாய்க்கால் அரச்சலுார் வரை சென்று, அங்கிருந்து இரண்டாக பிரிகிறது. அதில் ஒரு வாய்க்கால் சென்னசமுத்திரம்
பகுதிக்கும், மற்றொரு வாய்க்கால் சென்னிமலை பகுதி வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் சென்று முத்துார் அருகே மங்கலப்பட்டியை அடைகிறது.
இதில் வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி பகுதியில், கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே ரயில் பாதை செல்கிறது. அந்த இடத்தில் வாய்க்கால் தண்ணீர் குறுகலான பாலத்தின் அடியில் செல்வதால், அங்கு எப்போதும் ஏராளமான பொருட்கள் தேங்கி கிடக்கும். தற்போது வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் பாலத்தில் ஏராளமான பழைய மெத்தை, தலையணை மற்றும் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கிடக்கிறது. இதனால் அந்த இடத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ரயில்வே பாலத்தின் அடியில் புகுந்து தண்ணீர் செல்வதால், இந்த வழியாக எந்த பொருள் மிதந்து வந்தாலும், பாலத்தில் சிக்கி விடும். வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாய்க்காலுக்குள் வீசுவது மிகப்பெரிய கொடூர செயலாகும். நோய் தாக்கி பலியான கால்நடைகளையும் வாய்க்காலுக்குள் வீசுகின்றனர். பல நேரங்களில் மனித உடல்கள் மிதந்து வந்து, பாலத்தின் அடியில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பலத்த
துர்நாற்றம் வீசுகிறது.
கீழ்பவானி வாய்க்கால் புங்கம்பாடியை கடந்த பிறகும், ௯௦ கி.மீ., துாரம் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீரை பயன்படுத்துகிறோம். கீழ்பவானி வாய்க்காலுக்குள் அணை பகுதி முதல் கடைமடை வரை எந்த பொருளை வீசினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

