/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக.,5 முதல் பயன்பாட்டுக்கு வரும் கரட்டடிபாளையம் வாரச்சந்தை
/
ஆக.,5 முதல் பயன்பாட்டுக்கு வரும் கரட்டடிபாளையம் வாரச்சந்தை
ஆக.,5 முதல் பயன்பாட்டுக்கு வரும் கரட்டடிபாளையம் வாரச்சந்தை
ஆக.,5 முதல் பயன்பாட்டுக்கு வரும் கரட்டடிபாளையம் வாரச்சந்தை
ADDED : ஜூலை 24, 2025 01:56 AM
கோபி, கோபி அருகே, கரட்டடிபாளையத்தில் வாரச்சந்தை ஆக.,5 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
கோபி அருகே, ல.கள்ளிப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரட்டடிபாளையத்தில், பழைய வாரச்சந்தை வளாகம், 1.63 லட்சம் ரூபாய் செலவில், மேம்பாட்டு பணி முடிந்து, கடந்த ஜூன் 11ல், துணை முதல்வர் உதயநிதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
அதன்பின் அதன் வளாகத்தில், மேம்பாடு செய்யப்பட்ட, 130 கடைகள், 4.32 லட்சம் ரூபாய் செலவில், கரட்டடிபாளையத்தை சேர்ந்த ஒருவர் ஏலத்துக்கு எடுத்துள்ளார். அந்த கடைகள் அனைத்தும், வரும் ஆக.,5ம் தேதி முதல் செயல்பட உள்ளதால், அதுகுறித்து லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், பிளக்ஸ் பேனர் மூலம் அறிவிப்பு செய்துள்ளனர்.வாரச்சந்தை வளாகத்தில், மின் இணைப்புக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பணிகள், கடந்த இரு நாட்களாக தீவிரமாக நடக்கிறது. பணிகள் முடிந்ததும், ஆக.,5 முதல் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படும் என, டவுன் பஞ்.,
அதிகாரிகள் தெரிவித்தனர்.