/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி கோவில்களில் கார்த்திகை தீப விழா ஜோர்
/
புளியம்பட்டி கோவில்களில் கார்த்திகை தீப விழா ஜோர்
ADDED : டிச 14, 2024 01:26 AM
புளியம்பட்டி கோவில்களில்
கார்த்திகை தீப விழா ஜோர்
புன்செய் புளியம்பட்டி, டிச. 14-
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், சுப்ரமணியர், கரிவரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அண்ணாமலையார் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரமணியர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத, சுப்ரமணியர் உற்சவர் உலா நடந்தது. இதையடுத்து வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபட்டனர்.
* கோபி பச்சைமலை முருகன் கோவிலில், திருக்கார்த்திகை கிருத்திகை விழா, சத்ரு சம்ஹார மகா ேஹாமம், 108 சங்காபிஷேகம், கார்த்திகை தீப விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

