/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரிபா கிராமத்துக்கு அடிப்படை வசதி தேவை
/
கஸ்துாரிபா கிராமத்துக்கு அடிப்படை வசதி தேவை
ADDED : டிச 02, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அரச்சலுார் அருகே உள்ள கஸ்துாரிபா கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது: கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இவர்களில் சிலருக்கு பட்டா உள்ளது. 70 பேருக்கு பட்டா இல்லை. இங்கு சில இடம், பூமிதான இயக்கத்தில் வருவதால், பட்டா பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதுபற்றி ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம், பட்டா வழங்க வேண்டும். தவிர இப்பகுதிக்கு போதிய தார்சாலை, மின் விளக்கு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதையும் செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

