/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 7 வாலிபர்கள் கடத்தல்
/
ஈரோட்டுக்கு ரயிலில் வந்த 7 வாலிபர்கள் கடத்தல்
ADDED : பிப் 07, 2024 11:21 AM
ஈரோடு: பெருந்துறை, சிப்காட்டில் உள்ள ஒரு அக்ரோ பார்ம்ஸ் ஆலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தப்பா நாயக், 10 ஆண்டாக வேலை பார்க்கிறார்.
அவரது ஊரை சேர்ந்த ஏழு பேருக்கு, சிப்காட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்தார். இதன்படி ஏழு பேர் ரயிலில் ஈரோட்டுக்கு புறப்பட்டனர். கடந்த, 3ம் தேதி வந்த நிலையில் ஏழு பேரையும் கடத்தி விட்டதாகவும், ஒரு நபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் என, ௧.௪௦ லட்சம் ரூபாய் தந்தால் விடுவிக்கப்படுவர் என்றும், பந்தப்பா நாயக்கை சிலர் மிரட்டியுள்ளனர். இதனால் அவரும், 1.40 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்டவுடன், மர்ம கும்பலின் மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகள், முழுமையாக ஆராயப்பட்டு விட்டது. ஈரோட்டில் சம்பவம் நடந்ததாக அறிகுறி ஏதுமில்லை. கடத்தப்பட்ட ஏழு பேரின் மொபைல் எண்ணும், கடைசியாக தர்மபுரியைத்தான் காட்டியது. இதனால் தர்மபுரியில் அவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டும். கடத்தியது வட மாநில கும்பலாக இருக்கலாம் என கருதுகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

