/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கே.எம்.சி.ஹெச்., சார்பில் அரசுப்பள்ளிக்கு கட்டடம்
/
கே.எம்.சி.ஹெச்., சார்பில் அரசுப்பள்ளிக்கு கட்டடம்
ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில், ஈரோடு அருகே நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து, ௨.௧௧ கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் கட்டப்பட்ட கட்டடத்தில், எட்டு வகுப்பறை, ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நுாலகம் அமைந்துள்ளது. பள்ளி கட்டடத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். நிகழ்வில் எம்.பி.,க்கள் சுப்பராயன், பிரகாஷ் மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய நல்லா ஜி பழனிசாமி, 'கல்வி மற்றும் சமூக முன்னேற்ற பணிகளில், கே.எம்.சி.ஹெச்., தொடர்ந்து பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்களின் தரமான கல்வி, முன்னேற்றத்துக்கு இந்த புதிய கட்டடம் உதவிகரமாக இருக்கும்' என்றார்.விழாவில் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, டாக்டர் அருண் என்.பழனிசாமி ஆகியோரும் உரையாற்றினர்.