ADDED : செப் 29, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகேயுள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது. அக்., 31 வரை நடக்கிறது.
கலெக்டர் கந்தசாமி, கண்காட்சி விற்பனையை துவக்கி வைத்தார். இதுகுறித்து மேலாளர் மாலதி கூறியதாவது: கண்காட்சியில் காகிதக்கூழ், மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, துர்க்கை, மகாபாரதம் செட், தட்சிணா-மூர்த்தி, லட்சுமி நாராயணர், தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், மீனாட்சி கல்யாணம் செட், கஜலட்சுமி, கிருஷ்ணன், தேர்கள், நின்ற கருடன், அனுமன் சேவை, ஆடிப்பூர அம்மன்கள், ராமர் சேது பாலம், குபேரர், காய்கறி, பழங்கள் உட்பட, 500க்கும் மேற்பட்ட தனி மற்றும் செட் கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
