ADDED : செப் 29, 2026 05:29 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; கட்டுமான தொழிலாளர் பணியாற்றும் இடத்தி-லேயே, தொழிலாளர் நலத்துறை மூலம், மருத்-துவ பரிசோதனை முகாம் ஈரோட்டில் நடந்தது.
இதன்படி ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கூடுதல் கட்டடத்தில் பணி-யாற்றும் பிற மாநில கட்டுமான பணியாளர்க-ளுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை, டெங்கு மற்றும் மலேரியா அறிகுறி இருந்தோரை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினர். இதேபோல் ஈரோடு தீயணைப்பு நிலைய வளா-கத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் பணி-யாற்றும் பிற மாநில தொழிலாளர்களுக்கும் மருத்துவ முகாம் நடந்தது.
