/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா டிச.,25ல் துவக்கம்
/
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா டிச.,25ல் துவக்கம்
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா டிச.,25ல் துவக்கம்
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா டிச.,25ல் துவக்கம்
ADDED : நவ 20, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகேயுள்ள, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஆண்டு
தோறும் ஜனவரி மாதத்தில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கிறது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, அம்மன் சன்னதி எதிரேயுள்ள 60 அடி நீளமுள்ள குண்டத்தில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, நடப்பாண்டில் குண்டம் தேர்த்திருவிழா டிச., 25ல், பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. அதையடுத்து வரும், 2026 ஜன.,5ல், சந்தனக்காப்பு அலங்காரம், 8ல் பக்தர்கள் பூ மிதிக்கும் குண்டம் திருவிழா, 9ல், திருத்தேரோட்டம், 10ல், மலர் பல்லக்கு உற்சவம், 17ல், மறுபூஜை நடக்கிறது.