/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
/
சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
ADDED : நவ 20, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு விபத்துக்குள்ளான சோளம் லோடு ஏற்றி வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவை அரசு போக்குவரத்து கழகம், பழனி--2 பணிமனையை சேர்ந்த அரசு பஸ், அந்தியூரில் இருந்து பழனி செல்வதற்காக,
70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மதியம், 3:40 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சோளம் லாரியின் பக்கவாட்டில் பஸ் மோதியது. இதில் லாரியின் தார்பாய் சேதமடைந்து சோளம் மூட்டைகள் சாலையில் கொட்டின. பயத்தில் பயணிகள் அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

