ADDED : நவ 20, 2025 02:23 AM
காங்கேயம், நதேனி மாவட்டம், கோகிலா
புரத்தை சேர்ந்த பழனியம்மாள், 65, கடந்த ஜனவரியில் வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயசாமி கோவிலுக்கு வந்தபோது கழுத்தில் இருந்த, 3 பவுன் தங்கச்செயின் காணாமல் போனது. அதே போல் கோவை மதுக்கரையை சேர்ந்த மயிலாத்தாள், 65, என்பவர் செப்டம்பரில் வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவிலுக்கு வந்தபோது, 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போனது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாட்ராயன் கோவில் பிரிவு அருகே, வெள்ளகோவில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நடந்து வந்த ஈரோடு மாவட்டம், ஈங்கூர் பாரதி நகரை சேர்ந்த செல்வி, 60, என்பவரை விசாரித்தபோது, நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட கிளை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

