/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு, -பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் கொங்கு கல்வி நிலையம் 1௦௦ சதவீத தேர்ச்சி
/
10ம் வகுப்பு, -பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் கொங்கு கல்வி நிலையம் 1௦௦ சதவீத தேர்ச்சி
10ம் வகுப்பு, -பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் கொங்கு கல்வி நிலையம் 1௦௦ சதவீத தேர்ச்சி
10ம் வகுப்பு, -பிளஸ் 1 பொதுத் தேர்வுகளில் கொங்கு கல்வி நிலையம் 1௦௦ சதவீத தேர்ச்சி
ADDED : மே 19, 2025 01:57 AM
ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய, 329 மாணவ--மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மாணவன் எம்.வெற்றிவேலன், கே.முகமது சஹிப், 495 மதிப்-பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், எஸ்.ஹரிஹரன், 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எம்.திருமுருகன், ஆர்.தரணீஸ்வரன், எஸ்.சமிக்சா, எஸ்.அநுக்கிரகா பெபி, எஸ்.மகாலட்சுமி ஆகியோர், 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றா-மிடமும் பிடித்தனர். கணிதத்தில், 12 பேரும், அறிவியலில், 36 பேரும், சமூக அறிவியலில், 20 பேரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தமிழில், 13 பேரும், ஆங்கிலத்தில், 14 பேரும், ௯9 மதிப்பெண் பெற்றனர். தேர்வெழுதிய, 329 பேரில், 490க்கு மேல் 15 பேரும், 480க்கு மேல் 43 பேரும், 475க்கு மேல் 69 பேரும், 450க்கு மேல் 143 பேரும், 400க்கு மேல் 263 பேரும் மதிப்-பெண்கள் பெற்றனர்.இதேபோல் பிளஸ் 1 தேர்வெழுதிய, 440 மாணவ மாணவி-களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவன் ஆர்.பி.மாதவராஜன், 592 மதிப்பெண் பெற்று பள்ளியில் முத-லிடம், பி.ஹேமவர்ஷினி, இ.எஸ்.பிரகதி, 590 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஜி.கோபிகா ஸ்ரீ, 588 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரை கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலை பள்ளி தலைவர் சின்னச்சாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குண-சேகரன், உதவித்தலைவர்கள் சோமசுந்தரம், தெய்வசிகாமணி, இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாக-ராஜன், முன்னாள் பொருளாளர் அண்ணமார் பெரியசாமி, செயற்-குழு உறுப்பினர் சர்வலிங்கம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.