சிடிடி 2025 போட்டியில் கொங்கு பொறியியல் கல்லுாரி சாதனை
சிடிடி 2025 போட்டியில் கொங்கு பொறியியல் கல்லுாரி சாதனை
ADDED : நவ 05, 2026 06:36 AM

ஈரோடு:ஐ.ஐ.டி.,
மும்பையில் கட்டுமான தொழில்நுட்ப தின கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியாக, சிடிடி 2026 என்ற ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில்,
கட்டட திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்
அடிப்படையிலான வாங்கும் திட்டத்தை உருவாக்கும் சவால்
வழங்கப்பட்டது. இது நடைமுறை பயன்பாடு மற்றும் செயல் திறனை மையமாக
கொண்டிருந்தது.
பதிவிலிருந்து திட்ட உருவாக்கம் வரை பல்வேறு
சுற்றுகள் நடத்தப்பட்டு, இறுதியாக மேடையில் மிகுந்த திறமை மற்றும்
புதுமையை வெளிப்படுத்தும் தேசத்தின் முன்னணி அணிகள் களமிறங்கின.
கொங்கு பொறியியல் கல்லுாரியின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட்
மெஷின் லெர்னிங் துறையிலிருந்து, மூன்று மாணவர்கள் விஜயகாந்த்,
சுபிகரன் ரவிசங்கர் மற்றும் சஞ்சய், ஏஐ பவர்ட் எம்ஈபி டேக் ஆப் என்ஜின்
பிடிஎப் வரை படத்திலிருந்து, சில நிமிடங்களில் அளவுகள் மற்றும்
அளவீடுகளின் பட்டியல்' என்ற திட்டத்துக்காக, ரூ.1,00,000 ரொக்க
பரிசுடன் முதல் பரிசை பெற்றனர்.
இந்த அணியை கட்டட பொறியியல் துறை
முனைவர் ராம்பிரதீப் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை முனைவர் சத்யா
ஆகியோர் வழிநடத்தினர். இந்த சாதனை மூலம் கல்லுாரிக்கு பெருமை
சேர்த்ததற்காக, கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன் மற்றும்
முதல்வர் பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
