/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பொறியியல் கல்லுாரி பேராசிரியைக்கு ரூ.54 லட்சம் மானியம்
/
கொங்கு பொறியியல் கல்லுாரி பேராசிரியைக்கு ரூ.54 லட்சம் மானியம்
கொங்கு பொறியியல் கல்லுாரி பேராசிரியைக்கு ரூ.54 லட்சம் மானியம்
கொங்கு பொறியியல் கல்லுாரி பேராசிரியைக்கு ரூ.54 லட்சம் மானியம்
ADDED : டிச 03, 2025 07:49 AM

ஈரோடு:பெருந்துறை
கொங்கு பொறியியல் கல்லுாரி மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் துறை முதுநிலை
இணை பேராசிரியர் கோமதி, 'உணவு தொழில்களில் பயன்படுத்தப்படும்
குளிரூட்டல் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் ஹைட்ரோப்ளூரோ
கார்பன் குளிரூட்டிக்கு மாற்றாக இயற்கை கார்பன் - டை - ஆக்ஸைடை கொண்டு
வடிவமைத்தல்' என்ற தலைப்பிலான திட்டத்துக்காக, தமிழ்நாடு தொழில்
வளர்ச்சி கழகம் (டிட்கோ) வழங்கும் பல்கலை ஆராய்ச்சி பூங்கா திட்டத்தில்,
27 லட்சம் ரூபாய் மற்றும் கோவை ப்ரீஸ்டன் டெக்னலாஜிஸ் நிறுவனத்திடம்,
27 லட்சம் ரூபாய் என, 54 லட்சம் ரூபாய் மானியம் பெற்றுள்ளார். இதை
கோவையில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டம் ப்ரீஸ்டன் டெக்னலாஜிஸ், கோவை நிறுவனத்துடன் இணைந்து நடக்கும் தொழில் சார்ந்த ஆராய்ச்சி திட்டமாகும்.
இந்த
ஆராய்ச்சி உணவு தயாரிப்பு மற்றும் குளிர் சேமிப்பு துறைகளுக்கு
சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், ஆற்றல் திறன் கொண்டதுமான
கார்பன்-டை-ஆக்ஸைடு அடிப்படையிலான குளிரூட்டல் அமைப்பை
வடிவமைத்து, பரிசோதித்து, தரச்சான்று வழங்குவதை நோக்கமாக
கொண்டுள்ளது.
மானியம் பெற்ற பேராசிரியைக்கு, கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் பரமேஸ்வரன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

