/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.௭ லட்சம்
/
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.௭ லட்சம்
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.௭ லட்சம்
கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.௭ லட்சம்
ADDED : மார் 18, 2024 03:07 AM
ஈரோடு: கே.பி.ஐ.டி., புனேவில், கே.பி.ஐ.டி., டெக்னாலஜிஸால் நடத்தப்பட்ட, ஸ்பார்க்கிள்-2024 (10வது பதிப்பு) சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு போட்டி (இன்னோவேஷன் கான்டெஸ்ட்) நடந்தது. இதில் உலகெங்கிலும் உள்ள, 433 நிறுவனங்களில் இருந்து, 19,765 பங்கேற்பாளர்களிடமிருந்து, 1,324 யோசனைகள் பெறப்பட்டன. இதில் எட்டு யோசனை இறுதிச்சுற்றுக்கு தேர்வு பெற்றது. இதில் ஒன்றாக பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியை சேர்ந்த ஜிரெக்ஸ் அணி இடம் பெற்றது.
இதில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் நித்தியானந்தன் வழிகாட்டுதலில் ரூபக்பி, வெங்கடேஷ், மனோஜ், தர்ஷனா மற்றும் ஹரிஹரசுதன் இடம் பெற்றனர். இவர்களின் 'ஆன்போர்டு ஹைட்ராக்ஸி வாயு உற்பத்தி அமைப்பு' யோசனை முன்மொழியப்பட்டது. இதற்காக பிளாட்டினம் விருதுடன், 7 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றனர். குழுவினருக்கு கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

