/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பள்ளி மாணவன் தேசிய போட்டிக்கு தேர்வு
/
கொங்கு பள்ளி மாணவன் தேசிய போட்டிக்கு தேர்வு
ADDED : பிப் 06, 2025 05:37 AM
பெருந்துறை: இந்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியை நடத்தியது. இதில், பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சபரி உருவாக்கிய, அடிச்சுவடு மின்சார ஜெனரேட்டர் உற்பத்தி படைப்பு முதல் பரிசும், மாணவர்கள் உதயவாணன், ஹர்ஷித் ஆகியோர் உருவாக்கிய தீயணைப்பு ரோபோ இரண்டாம் பரிசும் பெற்று, மாநில போட்டிக்கு தேர்வானது.
திருச்சி பிஷப்ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில போட்டியில், மாணவன் சபரியின் படைப்பு, மாநில அளவிலான தர வரிசையிலும் வெற்றி பெற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் புதுச்சேரியில் நடந்த, தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில், மாணவன் சபரியின் படைப்பான, அடிச்சுவடு மின்சார ஜெனரேட்டர் உற்பத்தி ஐந்தாம் இடம் பெற்று, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிக்கு தேர்வு பெற்றது.
சாதனை படைத்த மாணவன் சபரி, வழிகாட்டிய ஆசிரியை வாணிஸ்ரீ ஆகியோரை, பள்ளி தலைவர் யசோதரன், துணைத் தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாக குழுவினர்கள், முதல்வர் முத்துசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.