/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பொதுப்பணி, கால்நடை துறை 'அல்வா'
/
கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பொதுப்பணி, கால்நடை துறை 'அல்வா'
கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பொதுப்பணி, கால்நடை துறை 'அல்வா'
கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பொதுப்பணி, கால்நடை துறை 'அல்வா'
ADDED : ஆக 23, 2025 01:55 AM
ஈரோடு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான (பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி) விவசாயிகள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் அமுதா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
மொத்தம், 21 மனு வந்தது. ஆர்.டி.ஓ., அழைத்தபோது, பொது பணித்துறை மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது தெரியவந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு தபால் வருவதில்லை. கூட்டம் நடக்கும் நிரந்தர தேதியை அறிவிக்க வேண்டும். எழுமாத்துார் ஆ கிராமத்தை ஆனந்தம்பாளையம் கிராமமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மழைக்காலம் துவங்குகிறது. மாடுகளுக்கு செலுத்தவதை போன்று ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில், ஈரோடு தாலுகாவில்-9 மனு, பெருந்துறை-4, மொடக்குறிச்சி-8, கொடுமுடி-7, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒரு மனு என, ௨௯ மனுக்களுக்கு தீர்வு காணவில்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய பதிலை விவசாயிகளுக்கு தெரிவிக்க ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார்.