/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி 69 அரசு பள்ளி ஹெச்.எம்.,களுக்கு பாராட்டு

ADDED : மே 21, 2024 11:34 AM
ஈரோடு,: தமிழகத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலை,மேல் நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர், தமிழில், 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடக்கவுள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழில் ஆறு பேர், 10ம் வகுப்பில் ஒருவர் என ஏழு பேர், தமிழில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 23 மேல்நிலை பள்ளிகள்; 10ம் வகுப்பில், 46 அரசு உயர்நிலை பள்ளிகள்,100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில், 69 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஏழு மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.