/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு
/
நம்பியூர் அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு
ADDED : செப் 27, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர் அரசுப்பள்ளி
மாணவனுக்கு பாராட்டு
நம்பியூர், செப். 27-- -
நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 2023--24ல் பிளஸ் ௨ படித்த மாணவன் செங்கதிர் செல்வன், கால்நடை மருத்துவ பிரிவில் தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநில அளவில் முதலிடம் பிடித்து, சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில் தற்போது படித்து வருகிறார். இந்நிலையில் மாணவனுக்கு, பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்கள், தங்களின் முன்னாள் மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.