/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 18, 2024 10:23 AM
நம்பியூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டி திருச்சியில் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மாணவி ரஞ்சிதா வெள்ளி பதக்கம் வென்றார்.
இதேபோல் பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நடந்த கடற்கரை கையுந்து பந்து போட்டியில், இரு பிரிவுகளில் இப்பள்ளி தங்க பதக்கம், வெள்ளி பதக்கம் பெற்றது. புதுக்கோட்டை மற்றும் ஈரோட்டில் நடந்த கையுந்து பந்து போட்டிகளிலும் குமுதா பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத், விளையாட்டு துறை கண்காணிப்பாளர் சாலமன் செங்குட்டுவன், குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணை செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.